Skip to main content

ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய பயிற்சி டி.எஸ்.பி? 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Did the training DSP trespass on the student on the train?

 

தென்காசி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் பல்கலைகழகத்தில் பி.எஸ்சி பயோடெக் 3ஆம் ஆண்டு படித்த வருகிறார். இவர், கடந்த 1ஆம் தேதி சென்னையில் இருந்து தன்னடைய சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு செல்வதற்காக பொதிகை விரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்து சென்னை எலும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.


மாணவி பயணித்த அதே பொதிகை ரயிலில் ஏ.சி. பெட்டியில் மாணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே வாலிபர் ஒருவரும் அமர்ந்துள்ளார். அவரிடம் அந்த வாலிபர் பேச்சு கொடுத்து வந்துள்ளார். பின் அனைவரும் தூங்கியபிறகு, இரவு 12.30 மணிக்கு ரயில் விருத்தாச்சலம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, மாணவியின் இருக்கைக்கு எதிரே படுத்திருந்த அந்த வாலிபர், மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அந்த மாணவியால் கூறப்படுகிறது. இதனால் மாணவி, உடனடியாக தனது செல்போனில் உள்ள காவலன் செயலி மூலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 


இதையடுத்து அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் அண்ணாதுரை மற்றும் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரும், அந்த மாணவி பயணித்த பெட்டிக்கு விரைந்துள்ளனர். அதையடுத்து, அவர்களிடம் கல்லூரி மாணவி நடந்ததை கூறினார். பின்னர், அந்த மாணவிக்கு மற்றொரு பெட்டியில் ஒரு இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரரும், டிக்கெட் பரிசோதகரும் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் பெயா் மகேஷ்குமார் என்பதும், சென்னையில் உள்ள காவலர் பயிற்சி டி.எஸ்.பி ஆக உள்ளதாகவும், சென்னையில் இருந்து பயிற்சிக்காக திருச்சி சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து, அவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் டி.எஸ்.பி மகேஷ்குமாரிடமும் நடத்திய விசாரணையில் அவர் படுகையில் இருந்து கீழே இறங்கும்போது தெரியாமல் தன்னுடைய கை அவர் மீது பட்டுவிட்டதாகவும் அதற்கு அவர் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்தத் தகவல் அந்த மாணவிக்கும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் தான் கொடுத்த புகாரை மீண்டும் வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து மகேஷ்குமார் உடனடியாக விடுவிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்