Published on 15/10/2021 | Edited on 15/10/2021
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்துவருகிறது. அந்த வகையில், கரோனா தளர்வுக்குப் பின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்களை அனுமதிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா ஆலயம் இன்று (15.10.2021) திறக்கப்பட்டு, சாய்பாபா சிலைக்குப் பக்தர்களே பால் அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.