தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 862 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 875 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,01,023 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 1,14,043 பரிசோதிக்கப்பட்ட நிலையில் நேற்று 1,05,832 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்து வருகிறது.சென்னையில் மட்டும் இன்று 122 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,214 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 7 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதிற்கும் உட்பட்ட 58 சிறார்களுக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,588 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,009 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,61,428 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-99, ஈரோடு-67, செங்கல்பட்டு-79, தஞ்சை-30, திருவள்ளூர்-34, சேலம்-54, திருப்பூர்-60, திருச்சி-30, நாமக்கல்-39 பேருக்கு கரோனா இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.