Skip to main content

"ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது"- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167- வது படமாக உருவாகியுள்ள, இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

darbar film audio launch actor rajini kanth speech

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விவேக், யோகி பாபு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் சங்கர், லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 
 

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. தமிழக அரசு மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி. இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான ஞானம் படைத்தவர்கள் எவரும் இல்லை. அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது. ரமணா பார்த்தபோது எனக்கு முருகதாஸை பிடித்து விட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய் விட்டது. 

darbar film audio launch actor rajini kanth speech


நான் 160- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் 'தர்பார்' ஸ்டைலாகவும், த்ரில்லாகவும் இருக்கும். எல்லாவற்றிலும் எதிர்மறை கருத்துக்கள் அதிகம் பரவுகிறது. அதனால் அன்பை பரப்புங்கள். டிசம்பர் 12- ஆம் தேதி எனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்" ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்தார். 
 

 

 

சார்ந்த செய்திகள்