Skip to main content

நாட்டிய கலைஞர் வெளியேற்றம்... ஸ்ரீரங்கம் கோவிலில் சர்ச்சை!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து மதத்தைக் காரணம் காட்டி தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக பரதநாட்டிய கலைஞர் தெரிவித்துள்ளது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பரதநாட்டிய கலைஞரான இவர், நடனத்திற்காக தமிழ்நாடு அரசின் பாராட்டைப் பெற்றவர். மேலும், கோவிலில் பரதநாட்டியம் அரங்கேற்றமும் செய்துள்ளார். இஸ்லாம் மதத்தில் பிறந்திருந்தாலும் வைணவத்தை ஏற்று எப்பொழுதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், அண்மையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற ஜாகீர் உசேனை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வெளியே போகச் சொல்லி ஆபாசமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. கோவில் வாயில்வரை அவரை திட்டிக்கொண்டே அந்த நபர் அவரை வெளியேற்றினார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ஜாகீர் உசேன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ''கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு பலகை பழைய நடைமுறை. மத நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் இறை நம்பிக்கை உள்ளவர்களை அனுமதிக்க வேண்டும். நான் பெருமையாகச் சொல்வேன், இஸ்லாமில் பிறந்து வைணவத்தை ஏற்றாலும் இஸ்லாமைச் சேர்ந்தவர்களாலோ அல்லது இந்துக்களாலோ எந்த மிரட்டலும் இதுவரை வந்ததில்லை. இந்த சர்ச்சைக்குப் பிறகு கூட வரவில்லை. நான் பெருமாளை சேவிக்க உள்ளே போன உடனே, ‘நீ எப்படி உள்ள வரலாம்.... ' எனச் சொல்லமுடியாத வார்த்தைகளால் கிளி மண்டபத்திலிருந்து வெளியே வரை திட்டி வெளியே அனுப்பினார்'' என்றார்.

 

 Dance artist released ... Incident in Sri Rangam temple!

 

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.