Skip to main content

பட்டாசு ஆலை விபத்தில் மூன்று பேர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

cuddalore district cracker plant incident chief minister condolences

 

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெரியக்கரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு, கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

 

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்