Skip to main content

கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து  மறியல் செய்த 664 பேர் கைது

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
kattu

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பந்த் அறிவித்திருந்தது. அதற்கு திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது.

  அதன் படி திங்களன்று கடலூர் மாவட்டத்தில்  15 இடங்களில் திமுக, திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. கடலூரில் திமுக தலைமையில் சீமாட்டி சிக்னல் மறியல் போராட்டம் நடந்தது. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி, நகர செயலாளர்  ராஜா, காங்கிரஸ் நிர்வாகி  வழக்கறிஞர் சந்திரசேகரன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாமரைச்செல்வன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 90 பேர் கைது செய்யப்பட்டனர். இது போல கடலூர் அண்ணா பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாநிலக்குழு மாதவன் ,மாவட்ட செயற்குழு  சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 60 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.  வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜா உள்பட 30 பேர்  கைது செய்யப்பட்டனர்.

 

kattu

 

இது போல சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  காந்தி சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் ராஜா, மாநிலக்குழு மூஸா, மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் புவனகிரி சதானந்தம், கீரப்பாளையம் வாஞ்சிநாதன், குமராட்சி மூர்த்தி உள்ளி பலர் கலந்து கொண்டனர். இதில் 40 பேர்  கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் வடக்குவீதி தபால்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நிர்வாகி சேகர் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 இது போலகாட்டுமன்னார்கோவில்  திமுக அலுவலகத்திலிருந்து திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து  முழுக்கங்கள் எழுப்பினர். திமுக நகர செயலாளர் கணேசமூர்த்தி. அவைதலைவர் கருணாநிதி, காங்கிரஸ் நஜிர்அகமது,அன்வர்,இளங்கீரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மணவாளவன்,ராவணன் ,நாகராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நகர செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சி.முட்லூர். பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட 15 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 664 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Black flag struggle against Tamil Nadu Governor in Kattumannarkoil

 

காட்டுமன்னார்குடி வட்டம் மா. ஆதனூர் கிராமத்திற்கு நந்தனார் குருபூஜை நிகழ்ச்சிக்காகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்தார். இவர் தமிழகத்தில் சனாதனத்தை ஆதரித்துப் பேசியதைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புப் பட்டை அணிந்தும், கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடைபெற்றது. 

 

போராட்டத்திற்குக் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக் குழு உறுப்பினர்கள் இளங்கோவன், புகழேந்தி, வெற்றி வீரன், நகர அமைப்பாளர் மணிகண்டன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், புஷ்பராஜ், முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் முருகவேல் மற்றும் தோழர்கள் நீலமேகன், ராஜேந்திரன், மணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

மாமேதை கார்ல் மார்க்ஸ், சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், நந்தனார் கொள்கைகளைத் திரித்து பொது மேடையில் சனாதன கொள்கைகளைப் பேசி வருவதாகவும் தமிழக மக்களுக்குத் தொடர்ந்து ஆளுநர் துரோகம் விளைவித்து வருவதாகவும் கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

Next Story

வீடு கட்டப் பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோகச் சிலைகள் 9 கண்டெடுப்பு

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

 9 Ancient Metal Sami Idols Found While Digging a Pit Near Kattumannarkoil

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி அருகே உள்ளது திருநாரையூர். இக்கிராமத்தில் புகழ் பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த உத்திராபதி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு சனிக்கிழமை அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடப்பாரையால் நோண்டும் போது டங் என்ற சத்தம் கேட்டுள்ளது. 

 

இதனையடுத்து  அஸ்திவாரம் தோண்டும் பணியில் இருந்த வள்ளல் என்பவர் இது குறித்து வீட்டு உரிமையாளர் உத்திராபதியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் அப்படியே இருக்கட்டும் எனக் கூறி  அஸ்திவாரம் தோண்டும் தொழிலாளர்களை  மாற்று  வேலை செய்யச் சொல்லிவிட்டு மாலை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்கு வந்த தொழிலாளர் வள்ளல், அந்த இடம் தோண்டப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கிராம உதவியாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சீனுவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர் வாசுகி சோழன் ஆகியோர்  சம்பவ இடத்துக்குச் சென்று, உரிமையாளர் உத்திராபதி வீட்டிற்குள் பார்த்தபோது பழங்கால வெண்கல சாமி சிலைகள் 6 இருந்தது. சம்பவ இடத்துக்கு கடலூர் எஸ்பி ராஜாராம் தலைமையில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமார், குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீஸார் சிலையை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் உத்தராபதியிடம் விசாரணை நடத்தியதில், நேற்று அதிகாலையில் எழுந்து பள்ளம் தோண்டி அதில் இருந்த 6 சாமி சிலைகளை எடுத்து மறைந்து வைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டினர் அதில் மேலும் 3 சிலைகள் கிடைத்துள்ளது.

 

இதில் கைப்பற்றப்பட்ட சிலையில் பீடத்துடன் உள்ள சிவன் பார்வதி, இடம்புரி விநாயகர், நடராஜர் ஆடிப்பூர அம்மாள், சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்மன், திரிபூரநாதர்(சிவன்), சண்டீஸ்வரர், திருஞானசம்பந்தர் ஆகிய சாமி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளை எடுத்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையான சிலைகள் என்று கூறப்படுகிறது.