
உலக மனித உரிமைகள் நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தமிழ்நாடு பெண்கள் ஆணையம், திருச்சி சரக காவல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருநங்கைகளுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் பரிமாறப்பட்டன.
இதில் ‘கேடயம்’ என்ற திட்டத்தின் மூலம் குடும்ப வன்முறை, வரதட்சணை, பணியிடத்தில் பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், பேசப்பட்ட நிலையில், சிறப்புரையாற்றிய டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, 'கேடயம்' திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், திருநங்கைகள் நாம் வாழும் உலகில் ஒரு அங்கமாவர் என்றும், திருநங்கைகள் சுயதொழில் தொடங்க தையல் மிஷின், கிரைண்டர், கால்நடைகளும் வழங்கப்பட்டது. எனவே திருநங்கைகளுக்கு ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.