Skip to main content

அரசு பேருந்து மோதி கால் இழந்த ராணுவ வீரருக்கு 1.67 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு! 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Court orders compensation to soldier who lost leg in government bus

 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன்(37). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு விடுமுறைக்கு அவர் தனது மனைவியின் சொந்த ஊரான திருச்சி குண்டூர் ராகவேந்திரா நகருக்கு வந்துள்ளார். அப்போது அவர் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். 


அப்போது, தனசேகரன் பாண்டியன் மீது அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் தனசேகரன் பாண்டியன் தனது வலது காலை இழந்தார். இதனால், அவர் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் விபத்தில் வலது காலை இழந்ததற்கு நஷ்டஈடு கேட்டு தனசேகரன் பாண்டியன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மீது வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கைத் திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் விசாரித்துவந்தார். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து இன்று நீதிபதி சோமசுந்தரம் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூபாய் 1 கோடியே 67 லட்சத்து 84 ஆயிரம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்