கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவருபவர் குமரவேல். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, வீட்டுமனைப்பட்டா முறைப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் 25 ஆயிரம் கையூட்டாகக் கேட்டுள்ளார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார்தாரர் கொடுத்த மனுவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குமரவேலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு குமரவேல் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.