தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி போடமுடியாமல் இருப்பவர்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மருத்துவ குழுவினர் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சிந்தாதிரிப்பேட்டை பகுதி மக்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தினர்.

Advertisment