சிதம்பரம் ரயில் நிலையத் தண்டவாளங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்பால நடைபாதை தூய்மைப்படுத்தப்பட்டு, அது கடந்த சில நாட்களாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்தநிலையில், இரவு நேரத்தில் மேம்பாலத்தின் கீழே உள்ள நடைபாதையைப் பயன்படுத்த போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தை அறிந்து இருப்புப்பாதை காவல் நிலையத்தின் சார்பாக ஆய்வாளர் அம்பேத்கார், அண்ணாமலை நகர் பேரூராட்சியிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பத்து சோலார் விளக்குக் கம்பங்கள் நிறுவும் பணிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதனைப் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ரயில் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். பணிகள் நடைபெறுதை அறிந்த மாணவர்கள், சிதம்பரம் இருப்புப் பாதை காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.