Published on 02/06/2021 | Edited on 02/06/2021
தமிழகம் உள்பட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளும் கரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், "ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள், உபகரணங்கள் உட்பட அனைத்துப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து முழுமையாக விலக்களிக்கத்திருக்க வேண்டும். உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது. பரிந்துரைக் குழுவினை உருவாக்கி இருப்பது அதிருப்தியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.