தமிழக அரசு நேற்று(17.04.2020) வெளியிட்ட அறிக்கையின்படி, கரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் திருச்சியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள நோயாளிகளின் பட்டியல் 46 என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் திருச்சியில், நேற்று முன்தினம்(16.07.2020) அரசு மருத்துவமனையில் கரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகியதால் 29 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதி 14 பேர் மட்டுமே திருச்சியில் கரோனா சிகிச்சையில் இருப்பதாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம்..
இந்த நிலையில், நேற்று வெளியான பட்டியலில் 43 பேர் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இன்று வெளியான பட்டியலில் புதிதாக 3 பேர் சேர்க்கப்பட்டு 46 அக உயர்ந்தது..இதனால் தமிழக அரசின் அறிவிப்பும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து முறையான விளக்கத்தை திருச்சி மாவட்ட நிர்வாகத்தினர் இதுவரை அளிக்கவில்லை.
இந்த அறிக்கை சொல்வது, பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் 46 பேரா ? அல்லது 14 பேரா ? என்று திருச்சி மக்களைப் பெரிய குழப்பதில் ஆழ்த்தி இருக்கிறது.