தமிழகத்தில் கரோனாபாதிப்பு ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்கடந்த சில நாட்களாகவேகேரளாவில் கரோனாதினசரிபாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றும் கேரளாவில்தினசரிகரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்கேரளாவில் 32,803 கரோனாஉறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினால்மட்டுமே கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்கேரளாவில் தொடர்ந்து கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக கர்நாடக மாநிலங்களின்எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத்தீவிரப்படுத்த தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழக மற்றும் கர்நாடகச் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன்தொலைப்பேசியில் இந்த அறிவுறுத்தலைத்தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றுதான் தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன்பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.