Skip to main content

தமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..?

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

gh

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,679 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,193 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு பிறகு 1,000க்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 5,69,370 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,626 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,13,836 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,148 ஆக அதிகரித்துள்ளது. தமிழக்ததில் இன்று மட்டும் இதுவரை 94,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 65.15 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்