Published on 20/01/2022 | Edited on 20/01/2022

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் கடும் சோதனைக்குப் பின்னரே விமானத்தில் பயணிக்க பயணிகளை அனுமதித்து வருகின்றனர்.
அதே போல் திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் தர்மராஜ், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளின் வசதிகள் குறித்து விமான நிலையத்திற்குள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து நேற்று அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.