கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஐவிஆர்எஸ் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.அதன்படி"94999- 12345" என்ற தொலைபேசி எண்ணில் குரல்வழி சேவை மூலம் கரோனா பற்றி விளக்கம் பெறலாம்.மேலும் கரோனா அறிகுறி நமக்கு இருக்கிறதா? இல்லையா? உள்ளிட்டவற்றை குரல்வழி சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.
ஐவிஆர்எஸ் சேவை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொளி மூலம் கலந்து கொண்டார்.