மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமை தொடங்கி வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 100 கிராமங்களில் மினி கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்பட உள்ளது. மதுரையில் இனி வரும் காலங்களில் 12 மணி நேரத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் மட்டுமே மக்களுக்கு வழங்க முடியும்" என்றார்.