நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்திலும் சில நாட்களாக கரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் இன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குநர் தர்மபிரியா தெரிவித்துள்ளார். வண்டலூர் பூங்காவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 70 பேரும் விலங்குகளை நேரடியாக பராமரிப்பவர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.