Corona confirms director Suraj

Advertisment

தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை சீராக இருந்து கொண்டேவருகிறது. கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே இருந்துவருகிறதே தவிர, தொற்றை முழுவதுமாக குறைக்க இயலவில்லை. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது.

அந்தவகையில் கடந்த 24 ஆம் தேதி நடிகர் வடிவேலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி இருமல் இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின்இயக்குநர் சுராஜ்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.