Skip to main content

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய பாடல்; அவதூறுகளை பரப்பும் கேரளா

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

hkj

 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முயற்சியால் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையில் தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது. அணையின் பராமரிப்பு பணிக்காக கடந்த 1979-ம் ஆண்டு நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அணை பலப்படுத்தப்பட்ட பின்பு, அணையில் பல்வேறு வல்லுநர் குழுவினர் நடத்திய பல கட்ட ஆய்வுகளில் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர். அதன்படி அணையின் நீர்மட்டத் தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அணை பகுதியில் உள்ள பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

 

அதன்படி 2014-ம் ஆண்டிலிருந்து அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினரும் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்து வருகின்றனர். ஆனால் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. அதேநேரத்தில் இந்த அணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அணையை உடைக்க வேண்டும் என்றும், அணை உடைந்து விடும் என்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பி மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சர்ச்சைக்குரிய பாடல் இதுபோன்ற அவதூறுகளின் நீட்சியாக அணைக்கு எதிராக அனிமேஷன் வீடியோவுடன் கூடிய ஒரு பாடலை கேரளாவைச் சேர்ந்த சிலர் வெளியிட்டுள்ளனர். 

 

ராகவன் சோமசுந்தரம் என்பவர் எழுதி, பாடியதாகவும், அஷ்லின் என்பவர் இயக்கி, இசை அமைத்து, அனிமேஷன் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் அணைக்கு எதிரான அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளதோடு, அணையின் நீரால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பச்சிளம் குழந்தை தத்தளிப்பது போன்றும், மனிதர்கள், காட்டு விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட ஏராளமான அவதூறுகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இது தமிழக விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது. இது போன்ற அவதூறுகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசு மவுனம் சாதித்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா ஊராட்சி தீர்மானம்! தமிழக விவசாயிகள் கண்டனம்!!

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Kerala panchayat decision to demolish Mullai Periyar dam and build a new dam! Tamil Nadu Farmers Condemn!!

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் மாவட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் விவசாய நிலங்கள் பாசன வசதிக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

 

அப்படி இருக்கும் போது கேரளாவில் உள்ள சில விஷமிகள் முல்லை பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும் அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் வதந்தியை தொடர்ந்து கிளப்பி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கேரளா அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே உள்ள வெள்ளியமட்டம் ஊராட்சியில் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

 

இதற்கு தமிழக விவசாயிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியார் வைகை பாசன விவசாய சங்க  ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது, “முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என இடுக்கி வெள்ளியமட்டம் ஊராட்சி தலைவர் இந்துபிஜீ முன்னிலையில் கடந்த 23ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 8 சுயேச்சைகளும் இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜக மற்றும் கேரளா காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவர் வக்கீல் ரசூல் ஜோய் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கடிதம் அனுப்பி இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். அதுபோல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்பட மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தேவிகுளம் பீர்மேடு உடும்பன்சோலை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற கடிதம் அனுப்பி உள்ளோம்” என்று கூறினார்.  

 

 

Next Story

"இதை சொன்னால் நாளைக்கு தலைப்பு செய்தியாக மாறிவிடும்" - பிரித்விராஜ் பேச்சு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

prithviraj sukumaran talk about mullai periyar

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன்  கதாநாயகியாக நடிக்க, விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

 

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழு சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதில். இதில் பிரித்விராஜ் கலந்து கொண்டு பல கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், "சமீபத்தில் முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் செய்த ட்வீட்க்கு தமிழ் ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் கடுவா படத்திற்கு எப்படி தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் பிரித்விராஜ், "ரொம்ப நல்ல கேள்வி, ஆனால் நான் இந்த கேள்விக்கு பதில் சொன்னால், இது மட்டுமே நாளைக்குத் தலைப்பு செய்தியாக மாறிவிடும். நான் இங்க கடுவா படம் குறித்து பேசத்தான் வந்தேன்" என்று  கூறி கேள்வியைத் தவிர்த்து விட்டார்.