Published on 16/05/2022 | Edited on 16/05/2022
நூல் விலை உயர்வை எதிர்த்து இன்று தமிழகத்தில் ஜவுளி துறையினர், பின்னலாடை நிறுவனங்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருப்பூர், கோவை, கரூரில் இந்த போராட்டம் தீவிரமாகி உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நூல்விலையை கட்டுப்படுத்த கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நூல் விலை உயர்வால் தமிழகம் ஜவுளி துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி நூல் உயர்வால் ஜவுளித்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆலைகளில் பருத்தி இருப்பு, நூல் இருப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.