தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சைபழைய கலெக்டர் அலுவலகம் முன்பு வெகு நேரமாக நின்றிருந்த கண்டெய்னர் லாரியைத் தேர்தல் பறக்கும் படையினர்சோதனையிட்டதில்,50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமிமற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாபடம் பொறித்த, பள்ளிப் பைகள்இருப்பதுதெரியவந்தது. தற்போது அதனைத் தேர்தல் பறக்கும் படையினர்பறிமுதல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள பல்வேறு இடங்களில் மேலும் வாகனசோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது தேர்தல் பறக்கும் படை.
கடந்த2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 5 கண்டெய்னர்களில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், தஞ்சையில் அதிக பணம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தால் தேர்தலேநிறுத்திவைக்கப்பட்டு, பின்பு இடைத்தேர்தலில் திமுகவென்றது. இந்நிலையில் கண்டெய்னர் சோதனைஎன்பதுஇந்தத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கைப்பற்றப்பட்ட கண்டெய்னர் பெரியது என்பதால், உள்ளே வேறேதேனும் பொருட்கள் உள்ளதா, கொண்டுவரப்பட்ட பைகளுக்குச் சரியான ஆவணம் உள்ளதா எனவும்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம்தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.