Skip to main content

நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தொடர் முழக்கப் போராட்டம் !

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Congress Party Series Fragmentation of the Neet exam Cancel

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சிதம்பரம் தெற்கு வீதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ. துறை மாநில பொதுச் செயலாளர் ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.

 

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், அமீரக காங்கிரஸ் தலைவர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்துப் பேசினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஜெயச்சந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர்  வெங்கடேசன், சின்ராஜ் கட்சியின் நிர்வாகிகள் ஜெமினி ராதா, தில்லை மக்கின் ராஜாசம்பத்குமார், சம்மந்தமூர்த்தி செய்யது மிஸ்கின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்