சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் மற்றும் தமிழக கிளை அகில இந்திய வேளாண் மாணவர்கள் அமைப்பு இணைந்து பல்கலைக்கழக வேளாண் புலத்தில் 'நிலையான வேளாண்மை மற்றும் கிராமபுற வாழ்வாதரங்கள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஆதிகுரு கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்தார். வேளாண்புல முதல்வர் தாணுநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு “நமது நாட்டின் அனைத்து துறைகளிலும் மாணவ அமைப்புகளை பலப்படுத்தி சிறந்த தலைமை மற்றும் ஆளுமைகளை உருவாக்க வேண்டும். மாணவ அமைப்புகளிடம் இருந்து போதிய நிதி ஆதரங்களை திரட்டி ஒரு வைப்பு நிதியை உருவாக்கி எதிர்கால வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று பேசினார். இதனை தொடர்ந்து புல முதல்வர் தாணுநாதன் பேசுகையில், “மாணவர்களிடம் பேசுகையில் வெப்பமயமாவதல் சூழ்நிலையில் நிலையான வேளாண்மை மற்றம் கிராமப்புற வாழ்வாதரங்களை பாதுகாப்பது முக்கியதுவம் பெற்று வருகிறது.” என்றார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமூக அறிவியல்துறை தலைவர் கார்த்திகேயன், தேசிய தலைவர் வினோத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கான பரிசு மாணவர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. ‘மேலும் நிலையான வேளாண்மை மற்றும் கிராமபுற வாழ்வதாரங்கள்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டனர். மாணவ பிரதிநிதி ரஞ்சித் நன்றி கூறினார்.