மதுரை மேலமைடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், இவரது மகள் உயர்கல்விக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கரோனா நிவாரண உதவிகளுக்காக வழங்கினார். இச்செயலுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மன் கி பாத் உரையில் பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார்.
இவர் மீது மதுரை அண்ணாநகர் அன்பு நகரைச் சோ்ந்த கங்கைராஜன் (50), கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மோகன் மீது சில தினங்களுக்குமின் புகார் கொடுத்தார். அவர் ரூ.30 ஆயிரத்தை மோகனிடம் கடனாக வாங்கியதாகவும் அந்த தொகையை கங்கைராஜன் வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும், மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கங்கைராஜன் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகனை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் அவரைத் தேடியதால் மோகன் தலைமறைவானார். அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், கரோனா காலத்தில் மக்களுக்கு உதவியதால் பல்வேறு அமைப்புகள் என்னைப் பாராட்டின. இதைக் கெடுக்கும் வகையில் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மோகனுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.