மே 23 க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மா.கம்யூ. கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ஜி. ராமகிருஷ்ணன் நாகா்கோவில் வந்தாா். பின்னா் பாா்வதிபுரத்தில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், "புதுச்சோி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது அந்த அரசின் நிா்வாகத்தில் துணை நிலை ஆளுநர் அங்கு தலையிடுவது மற்றும் சில நிா்வாக முடிவுகளை எடுப்பது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. இதனை பற்றி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தற்போது உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளது அதை ஏற்று அந்த துணை நிலை ஆளுனா் உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீா் பிரச்சனை தலை விாித்தாடுகிறது. இதை உணா்ந்து தமிழக அரசு உடனடியாக போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரம் சம்மந்தமாக ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளது. மே 23 தேதி வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற வேண்டும். மாநில தலைமை தோ்தல் அதிகாாி சாியாக நடந்து கொள்ளாததால் வேறு ஓருவரை பாா்வையாளராக நியாமித்து அவா் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் மே 23-ம் தேதி மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் அதோடு தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வர வாய்ப்புள்ளது.
உள்ளாட்சி தோ்தலை அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். 7 போ் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில் காலதாமதப்படுத்தாமல் அவா்களை விடுதலை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ் நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு முன்னுாிமை அளிக்க வேண்டும்" என்றாா்.