உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.
இன்று தலைமைச் செயலகத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் படி உப்பு உற்பத்தி இல்லாத மழை காலங்களான அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் பாதிக்கப்பட்டும் குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுவதற்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். அதேபோல் தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் 'நெய்தல் உப்பு' என்ற பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையையும் தமிழக முதல்வர் துவங்கி வைத்துள்ளார். இதில் தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் சார்ந்த திட்டம் என்பதால் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோரும் பங்கேற்றனர்.