சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள சிவகாமி சுந்தரி வாய்க்கால் 2.5 கி.மீ நீளத்திற்கு ரூ. 11 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள உசுப்பூர் வாய்க்கால் 3.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ 4 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “கடலூர் மாவட்டத்தில் 122 பாசன வாய்க்கால்கள், 31 வடிகால் வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 58,655 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் தரும் என்பதால் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாய பெருமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், அருணகிரி, உதவி பொறியாளர்கள் குமார், ரமேஷ், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.