கரோனா மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "குறிப்பிட்ட காலத்திற்கு கரோனா தடுப்பூசி, மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். தடுப்பூசி, மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யுங்கள். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை, வழங்க வேண்டிய அரிசி மானிய தொகையையும் வழங்குங்கள். பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி விதிப்பால் கிடைத்த வருவாய் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. கரோனாவால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதியுதவி தேவை. கடன் வாங்கும் அளவை மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 3% இலிருந்து 4% ஆக உயர்த்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.