2021-2022ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது.
கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு மே மாதம் வழக்கம்போல தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.gov.in , www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், பதிவு செய்த செல்போன் எண்களுக்கு SMS வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.