Skip to main content

மூன்று குழந்தைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற கொடூர தந்தை!

Published on 18/11/2021 | Edited on 19/11/2021

 

childrens incident police investigation

 

கன்னியாகுமரி மாவட்டம், பெரிய விளையைச் சேர்ந்த குருநாதன் சுஜா தம்பதியருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தச்சூழலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் உடல் நலமின்றிக் காலமானார். பின் பெரியவிளையில் தனியே குழந்தைகளுடன் வசித்து வந்த சுஜாவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் அந்தோணிராஜின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து செல்ல பின்பு அந்தோணிராஜ் சுஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த நிலையில் இவர்கள் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம், காவல் கிணறில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடியேறினர். அங்குள்ள ஓட்டலில் இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே சுஜாவின் கடைசிக் குழந்தையான மகேஸ்வரி (வயது 10) நேற்று (17/11/2021) அங்குள்ள பேக்கரி கடையில் பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் தராமல் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது. இதனை பேக்கரி கடை உரிமையாளர் வளர்ப்புத் தந்தையான ஜேசு அந்தோணி ராஜூவிடம் தெரிவித்து குழந்தையைக் கண்டித்து வைக்குமாறு கூறியிருக்கிறார். 

 

இதில் ஆத்திரமான ஜேசு அந்தோணிராஜ் ராஜு வீட்டிற்கு சென்று தனியாக இருந்த மூன்று பிள்ளைகளிடமும் விசாரிக்க, அவர்கள் பதில் சொல்லாமல் போன நேரத்தில் கோபமான ஜேசு அந்தோணிராஜ் ராஜு மூன்று குழந்தைகளையும் தாக்கி மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் கதறியபடி தப்பிச் சென்றனர். பொது மக்கள் தீயை அணைத்து அவர்களைக் காப்பாற்றினர். தகவலறிந்து வீடு திரும்பிய சுஜாவும், அக்கம் பக்கத்தினரும், படுகாயமடைந்து கதறிக் கொண்டிருந்த மகேஸ்வரியை மீட்டு அருகிலுள்ள நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே மூச்சுத்திணறல் காரணமாக ஜேசு அந்தோணி ராஜூம் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதுகுறித்த சுஜாவின் புகார் அடிப்படையில் பணகுடி இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வளர்ப்புத் தந்தை ஜேசுராஜின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 

மூன்று குழந்தைகள் மீது வளர்ப்புத் தந்தை தீ வைத்துக் கொல்ல முயன்ற கொடூரம் மாவட்டத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.