Skip to main content

ஆம்புலன்சிலேயே நடந்த பிரசவம் 

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

Childbirth in an ambulance

 

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காரைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதா வயது 25 என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக  அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரை பணியில் இருந்த செவிலியர் பரிசோதனை செய்து விட்டு, உடனே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, கருமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது  கடுமையான பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. 

 

துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அல்லது மணப்பாறைக்கு நிறைமாத கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கும் நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. சுகப்பிரசவம் ஏற்படும் கர்ப்பிணியைக் கூட கண்டுகொள்ளாமல் உடனே அனுப்பி வைப்பதால் தான் இதுபோன்று ஆம்புலன்சில் பிரசவிக்கும் நிலை உள்ளது. கடந்த சில தினங்களில் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறைக்கு 2 முறையும், திருச்சிக்கு ஒரு முறையும் அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சில நிமிடங்களிலேயே ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்