Published on 30/11/2021 | Edited on 30/11/2021
சேலம் தொழிலாளர்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், உதவி ஆணையர் முத்து மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், ஆகியோர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர், அம்மன் நகர், பாரதி நகர், வரகூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பருத்தி தோட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளார்களா என ஆய்வு நடத்தினர்.
இதில், அப்பகுதியில் உள்ள ஒரு பருத்தித் தோட்டத்தில் 17 வயதான நான்கு சிறுமிகள் வேலை செய்வது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் நான்கு பேரும் மீட்கப்பட்டு, சேலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
குழந்தை தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியதாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.