Skip to main content

சிறுமி எரித்துக் கொலை... கொடூர வளர்ப்புத் தந்தை கைது!

Published on 24/11/2021 | Edited on 25/11/2021

 

child  incident in nellai... police action

 

நெல்லை மாவட்டத்தின் காவல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சபா. இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் கணவர் இறந்து விட்டதால் சுஜா ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை மறுமணம் மணம் செய்து கொண்டார். இவர்கள் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்பவர்கள். சென்ற 17ம் தேதி அன்று ஜேசு அந்தோணி ராஜிடம், உனது குழந்தை திண்பண்டத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் போய் விட்டது என்று பேக்கிக்காரர் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசு அந்தோணி ராஜ், வீட்டிற்கு சென்றவர் மூன்று வளர்ப்புக் குழந்தைகளையும் தாக்கி விட்டு குழந்தைகள் என்றும் பாராமல். மண்ணெண்ணெய்யை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

 

இதில் இரண்டு குழந்தைகள் அக்கம் பக்கத்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். படுகாயமடைந்த சிறுமி மகேஸ்வரியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த செய்திகள் நக்கீரன் இணையதளம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வளர்ப்புத் தந்தை ஜேசு அந்தோணி ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தார்.

 

இந்த நிலையில் சிகிச்சையிலிருந்து சிறுமி மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக மாற்றினர். விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி கொடூர வளர்ப்புத் தந்தையான ஜேசு அந்தோணி ராஜைக் கைது செய்தார்.

 

சார்ந்த செய்திகள்