Skip to main content

காவல் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Chief Minister opens Police Museum!

 

சென்னை எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக பிரம்மாண்டமான முறையில் மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28/09/2021) திறந்துவைத்தார். 

Chief Minister opens Police Museum!

 

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இந்து மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அ.கா. விசுவநாதன் இ.கா.ப., தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் அ. அமலராஜ் இ.கா.ப., காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

இந்த அருங்காட்சியகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற அரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்