திருவள்ளுவர் தினத்தையொட்டி, இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வள்ளுவர் உருவப்படத்திற்கு மலர்தூவி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருக்குறள் நாள்காட்டி, திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், குறளோவியம் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-4_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-2_13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-1_14.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th_12.jpg)