தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (08/06/2022) சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கைப்பட்டியில், 3 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார். பின்னர், சமத்துவபுர வளாகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவ சிலையினைத் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.