
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தாம்பரம்- சாய்ராம் பள்ளி மாணவன் மாஸ்டர் சர்வேஷ் ஐக்கிய நாடுகளின் 'SDG' உலகளாவிய இலக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 02/10/2021 அன்று கன்னியாகுமரி, வள்ளுவர் சிலை அருகில் இருந்து மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி 15/10/2021 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக, இன்று (16/10/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாணவனைப் பாராட்டி புத்தகம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, டாக்டர் என்.எழிலன், சாய்ராம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் அம்மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.
