



நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் இன்று (08/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லெப்டின்னட் ஜெனரல் ஹாலோனிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் விபத்துக்குள்ளாகி வீர மரணமடைந்தது குறித்து கேட்டறிந்தார்.
அதேபோல், வருகையாளர் பதிவேட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தாய்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததிற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன்!" என்று எழுதியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.