






சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார துவக்க விழாவில், பொதுமக்களிடையே கரோனா குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த எல்.இ.டி. பொருத்தப்பட்ட பிரச்சார வாகனங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து துவக்கிவைத்தார். அதேபோல், கரோனா விழிப்புணர்வு பதாகைகளைப் பார்வையிட்டார்.
கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் 'SHARECHAT' செயலியை முதலமைச்சர் வெளியிட்டார். கரோனா விழிப்புணர்வு எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் அவர் கையெழுத்திட்டு துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.