தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28/11/2021) கனமழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, வேலப்பன்சாவடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கே.ஜெயக்குமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.