Skip to main content

வாஸ்து காரணமா? பாதுகாப்பு  காரணமா? குமரியில் திடீரென ஓட்டலை மாற்றிய சந்திரசேகர ராவ்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 


       தெலுங்கானா முதல்வா் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது  அணி அமைப்பது தொடா்பாக மாநில கட்சிகளின் தலைவா்கள் மற்றும் தேசிய கட்சிகளின் முதல்வா்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். 

 

k


            அந்த வகையில் 7-ம் தேதி கேரளா வந்த சந்திரசேகர ராவ் திருவனந்தபுரம்  பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று தாிசித்து விட்டு முதல்வா் மா. கம்யூ பினராய் விஜயனை சந்தித்து மூன்றாவது அணி குறித்து பேசியதோடு  தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதமா் உருவாக வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திய சந்திரசேகர ராவிடம் பினராய் விஜயன் கேரளா மா. கம்யூனிஸ்டின்  நிலைப்பாடு என்பது  தேசிய தலைமையின் முடிவு தான் என்ற ஒற்றை வாியில் பதில் அளித்ததாக கேரளா கம்யூனிஸ்ட் வட்டாரம் தொிவித்தது. 

 

k


            இதனை தொடா்ந்து 8-ம் தேதி  மதியம் கன்னியாகுமாி வந்த சந்திரசேகர ராவ் திருவனந்தபுரத்தில் உள்ள பொிய ஸ்டாா் ஓட்டல்களை தவிா்த்து வரும் வழியில் தக்கலை எனும் ஒரு சிறிய ஊாில் உள்ள முபாராக் எனும் சாதாரண அசைவ ஓட்டலில் சாப்பிட்டாா். இது ஒரு வாரத்துக்கு முன்னே இந்த ஓட்டலில் தான் சாப்பிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்று அவாின் உதவியாளா்கள் தொிவித்தனா்.

 

k

பின்னா் கன்னியாகுமாியில்  முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரையையொட்டி உள்ள கனிமொழிக்கு சொந்தமான ஸ்பாா்ஸா ஓட்டலில் தங்க சென்றாா். அங்கு சென்ற  ஒரு மணி நேரத்தில் இந்த ஓட்டலில் இருந்து வேற ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யுங்கள் என அதிகாாிகளிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் உடனடியாக கேரளா அரசு விருந்தினா் மாளிகையில் தங்க ஏற்பாடுபாடு செய்யப்பட்டது. 

 

சந்திரசேகர ராவின் இந்த திடீா் மாற்றம் குறித்து நாம் விசாாித்தபோது...சந்திரசேகர ராவ் முதலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டல் மேற்கு பகுதியை பாா்த்து இருப்பதாலும் மேலும் அவா் ஓட்டலுக்குள் செல்லும் போது வாசல் படிகட்டு வலது காலில் தட்டியதால் அங்கு தங்குவது நல்ல வாஸ்தாக இருக்காது என்றும் இதனால் அங்கிருந்து அவா் எடுக்கும் முடிவுகளும் தீா்மானிப்பது நல்ல பலனை தராது என்பதால் தான் தெற்கு  வாசல் பகுதியை கொண்டிருக்கும் கேரளா அரசு விருந்தினா் மாளிகைக்கு சென்றாா் என்பது தான் உண்மையாக இருந்தாலும் பாதுகாப்பு காரணத்துக்காகத் தான் இடமாற்றம் செய்யப்பட்டாா் என்று அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாாிகள் கூறினாா்கள்.

 

சார்ந்த செய்திகள்