Skip to main content

4 நாட்களாக திறக்கப்படாத ரேஷன் கடை... ஏழைமக்கள் தவிப்பு!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Ration shop not open for 4 days ... Poor people suffer!

 

சிதம்பரம் பகுதியில் சரவணபவ கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அண்ணாமலைநகர், கனகசபை நகர். திருவக்குளம், மாரியப்ப நகர், காசுக்கடை தெரு உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் திருவக்குளம், கனகசபை நகர், தில்லையம்மன் கோயில் அருகே உள்ள கடை என இன்னும் சில கடைகள் கடந்த 4 நாட்களாகத் திறக்கவில்லை. இதனால் ஏழை பொதுமக்கள் மாதம் முதல் வாரத்தில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைவதாகக் கூறுகின்றனர். மேலும் ரேஷன் கடைகளை உடனே திறக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து சிதம்பரம் வட்ட வழங்கல் அலுவலர் நந்திதாவிடம் கேட்டபோது, ''சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணபவ கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் செயல்படும் கடையில் பணியாற்றிய ஊழியர்களை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மாற்றம் செய்யப்பட்ட கடைகளில் பணிசெய்யமாட்டேன் எனக் கூறி கடையைத் திறக்காமல் இருந்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து புகார் வந்தவண்ணம் உள்ளது. இது தவறான நடைமுறை சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

Ration shop not open for 4 days ... Poor people suffer!

 

கடலூர் மாவட்ட கூட்டுறவுதுறை துணைப்பதிவாளர் சண்முகம் கூறுகையில், ''சிதம்பரம் பகுதியிலுள்ள ரேஷன் கடையில் பணியாற்றிய சிலருக்குக் கடலூர் தலைமையிடத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆட்கள் வந்து பணியில் சேரும் வரை ஏற்கனவே இருந்தவர்கள் தான் பணியில் இருந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும். இவர்கள் கடையைத் திறக்காதது பற்றி இதுவரை தெரியாது. சம்பந்தபட்டக் கண்காணிப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்'' என்றார்.

 

தமிழ்நாடு நியாவிலைகடை பணியாளர்கள் சங்க மாநிலபொதுசெயலாளர் ஜெயச்சந்திரராஜா கூறுகையில், ''ரேஷன் கடையில் பணியாற்றுபவர்கள் மிகவும் சொற்ப வருமானத்தில் பணியாற்றி வருகிறார்கள். சிதம்பரத்தில் உள்ளவர்களை கடலுருக்கு மாற்றினால் போக்குவரத்து செலவு போக மிஞ்சுவது வெறும் சொற்ப வருமானம் தான். விற்பனையாளர்களைத் தலைமையிடத்தில் உள்ள சுயசேவை பிரிவுக்கு மாற்றுகிறார்கள் அதில் ஊழியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணியில் இருக்க வேண்டும். இதற்கு அலுவலகத்தில் உள்ளவர்களைக் கொண்டு பணி செய்யலாம். சுயசேவைபிரிவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதனால் ஊழிகள் சொற்ப சம்பளத்தையும் இழக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேசி வருகிறோம். விரைவில் சரிசெய்யப்படும்'' என்றார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.

 

Next Story

'பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்' உதயநிதி ஸ்டாலின் சிதம்பரத்தில் பேச்சு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வேன் மூலம் சிதம்பரம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை 15 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இது பிரச்சாரம் கூட்டம் போல் தெரியவில்லை. வெற்றி விழா போல் உள்ளது.

இங்கே வரும்போது ஒரு நல்ல செய்தியோட வந்துள்ளேன் 30ந்தேதி மாலை பானை சின்னம் விசிகவுக்கு உறுதியாகிவிட்டது.  ஒன்றிய பாஜக அரசு அவர்களுடன் கூட்டு வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன சின்ன வேண்டுமானாலும் கொடுத்துள்ளார்கள்.  இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னத்தை கொடுக்க முடியாது என்கிறனர். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர்கள், வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் வாதாடி பானை சின்னத்தை பெற்றுள்ளார்கள். பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்''என்றார்.

'வாக்களிக்க அனைவரும் முடிவெடுத்து விட்டீர்களா?'என  பொதுமக்களை பார்த்து கேட்க அனைவரும் 'முடிவெடுத்து விட்டோம்' என சத்தமாக கூறினார்கள். உங்களுக்கு  ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்கும் போது பானை சின்னம் தான் தெரியும் தெரிய வேண்டும். அதில் நீங்க அழுத்துற பொத்தான் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். கடந்த முறை திருமாவளவன் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த முறை 3 லட்சத்திற்கும் குறையாமல் அவர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் பானை சின்னம் அவரை தர மறுத்ததால் இந்த செய்தி இந்திய அளவில் பரவியுள்ளது. இது எப்படி வாங்கினார்கள் என்ற விவாதம் தொலைக்காட்சிகளில் வைரல் ஆகி வருகிறது. இந்த விளம்பரமே போதும் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் 15 கோடியில், தேரோடும் வீதியில் 10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது, பெரியண்ணா குளம், ஞானபிரகாச குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ 143 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ47 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2.5 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. 42 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளது. சாதனைகள் சிதம்பரம் நகரத்தில் முக்கிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ 23 கோடியில் விரைந்து நடைபெற உள்ளது. இதுவெல்லாம் நாம் செய்த சாதனைகள்.  

Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். இவரை சில அரசியல் புரோக்கர்கள் திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என கூறினார்கள் அவர் இது தான் கொள்கை கூட்டணி என உறுதியோடு இருந்தார். பாஜக கூட்டணி தான் கொள்ளை கூட்டணி.  நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுவது அண்ணன் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றியை தான்.  

மகளிர் தான் அரசு பேருந்துகளின் உரிமையாளர்கள் அவர்கள் எங்க நிறுத்தினாலும் நிறுத்தி ஏறி கொள்கிறார்கள் 3 வருடத்தில் 450 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். ரோஸ் கலர் பேருந்துகளை அவர்கள் ஸ்டாலின் பேருந்து என கூறுகிறார்கள். கட்டணம் இல்லா பேருந்து அது உங்களின் உரிமை.பெண்கள் பள்ளிக்கு மட்டும் போகாமல் கல்லூரிக்கு போய் பட்டங்களை பெற வேண்டும். அதற்காக புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி மாதம் ரூ 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். மீதி விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும். அந்தத் துறைக்கும் நான்தான் அமைச்சர் உறுதி அளிக்கிறேன். ஆனால் நீங்க எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 5  ஓட்டுகளும் கண்டிப்பாக பானை சின்னத்திற்கு கிடைக்க நான் உறுதி ஏற்றுக் கொள்கிறேன் என உறுதி அளிக்க வேண்டும்.

நான் பிரச்சாரம் மேற்கொண்டது ஒரு ட்ரெய்லர் தான் ஆனால் வரும் 6 ஆம் தேதி  இங்கு தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு  பாசிச மோடி அரசு பற்றியும் கழக ஆட்சி என்னென்ன திட்டங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பேசுவார்'' என்றார்.