Skip to main content

இதய பிரச்சனையால் மகன் உயிரிழப்பு... சோகம் தாங்காமல் தாய் தற்கொலை..!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

chennai velacherry ramprabhu mother ramani passes away

 

 

சென்னையில் மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சென்னை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் ரமணி (71) என்பவர் தனது மகன் ராம்பிரபு (32) என்பவருடன் வசித்து வந்தார். ரமணியின் கணவர் தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். அதன்பிறகு ரமணி தனது திருமணமாகாத மகன் ராம்பிரபுவுடன் வசித்துவந்தார். 

 

ராம்பிரபு கடந்த ஆண்டு தென் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். பின் அவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரின் இதயத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். 

 

தொடர் சிகிச்சையில் இருந்த ராம்பிரபு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு அவரது தாயார் மிகுந்து வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் மகனை பிரிந்த சோகம் தாங்காமல் ரமணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின்பேரில் அங்குவந்த காவல்துறையினர், ரமணியின் உடலை மீட்டு பிரதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

மகன் இறந்த சோகம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்