Skip to main content

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் முன்னிலையில் சென்னை காவல் ஆணையர் கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மட் அவசியம் குறித்து அறிவுரை!!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

police

 

சென்னை ரஜீவகாந்தி அரசு மருத்துவனைக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து சென்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் அங்கு வாகன விபத்தில் காயமடைந்தவர்களை காண்பித்து சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

 

சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விவேகானந்தா மற்றும் அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு வாகன விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருபவர்கள் மத்தியில் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஹெல்மட் அணியாமல் பயணம் மேற்கொள்ளவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறினார். விபத்து, காயம், உடல்வேதனை, மனவேதனை, ஹெல்மட் அணியாத அலட்சியத்தால் ஏற்படும் விபத்தினால் குடும்பத்தினர் படும் அவதி என அனைத்து காரணிகளையும் சுட்டிகாட்டி மாணவர்கள் ஹெல்மட் அணிய வேண்டும் என கூறினார்.   

 

​  police

 

police

 

மேலும் ஹெல்மெட்டை தலையில் அணியாமல் பெட்ரோல் டேங்கில் ஹெல்மட்டை வைத்துக்கொண்டு பயணம் செய்வது, ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேருக்கு மேல்  பயணம் செய்வது போன்ற செயல்களை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் ''இருசக்கர வாகனம் இவருக்கே'' என்ற விழிப்புணர்வு குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் வெடிகுண்டு மிரட்டல்; காவல் ஆணையர் விளக்கம்

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

threatening Coimbatore is an email rumour, says Police Commissioner

 

கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகத் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மாவட்ட டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இது ஒரு வழக்கமான வதந்திதான் என விளக்கமளித்துள்ளார். பண்டிகை காலங்களில் இதுபோன்று பொய்யான மிரட்டல் வருவது வழக்கம்தான் என்று கூறிய அவர், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், இந்த மின்னஞ்சல் தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், மக்கள் அமைதியாகத் தீபாவளியைக் கொண்டாட அனைத்து விதமான நடவடிக்கைகளும் காவல்துறையினர் சார்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 TDF Vasan in Puzhal Jail

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கிச் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டுப் போடப்பட்டது.

 

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக் குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் அடைக்கப்பட்டுள்ளார்.