Published on 14/10/2021 | Edited on 14/10/2021
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ஆணையரின் சொந்த வாகனத்தில் அவரை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த மற்ற காவல்துறை அதிகாரிகளும் தற்போது மருத்துவமனைக்கு விரைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.