Skip to main content

சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்! (படங்கள்)

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், சூறைக்காற்று மற்றும் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வோரோடு சாய்ந்தன. மேலும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சில ஏரிகள் திறக்கப்பட்ட நிலையில், அடையாறு, வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

 

இந்த பகுதிகளுக்கு விரைந்த பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சாலையில் விழுந்த மரங்களையும், தேங்கியுள்ள வெள்ள நீரையும் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன. 

 

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். 

 

ஸ்டாலினுடன் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்