Skip to main content

மீண்டும் வெறிச்சோடியது சென்னை மெரினா! (படங்கள்)

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உட்பட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து அவை நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா பீச் பல்வேறு நெறிமுறைகளின்படி அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டது. தற்பொழுது கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வாரத்தில் இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு  மூடப்பட்டது. இதனால் இன்று சென்னை மெரினா மீண்டும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்